கற்கோயில் (நாகர்கோவில் கஸ்பாசபை)
தென் திருவிதாங்கூரின் முதல் கிறிஸ்தவர் என்ற பெருமை மைலாடி வேதமாணிக்கத்துக்கு உண்டு. அவருடன் சேர்ந்து மைலாடியில் 1809ல் கிறிஸ்தவ சபையை ரிங்கிள் தவுபே தொடங்கினார். அவருக்கு பின்னர் 1818ல் மீட் ஐயர் மிஷனரி தலைமையிடத்தை நாகர்கோவிலுக்கு மாற்றினார். அங்கு சர்ச் கட்டும் பணி 1819ல் ஆரம்பமானது. முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்டதால் இதற்கு 'கற்கோயில்' என்ற பெயரும் உண்டு.
இங்கு கட்டட வேலைக்கு சிறைக் கைதிகள் பலர் பயன்படுத்தப்பட்டனர். சர்ச் கட்டி முடிக்க திருவிதாங்கூர் மகாராணி பார்வதிபாய் தம்புராட்டி உள்ளிட்ட பல மன்னர்கள் ஆதரவும், பொருளுதவியும் அளித்தனர்.
கற்கள் மற்றும் மரத்தடிகள் கொண்டு வர மகாராணி அனுமதியுன் நாகர்கோவில் நாகராஜா கோயில் யானை பயன்படுத்தப்பட்டது. இப்போது நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அழகுமிளிர காட்சி தருகிறது இந்த கற்கோயில். தெற்கு ஆசியாவிலேயே கைதிகளால் கட்டப்பட்ட மிகப்பெரிய சர்ச் இது. |
|
|
|